tamilnadu

img

அக்டோபரில் இந்தியாவின் வணிக ஏற்றுமதி 5.4 சதவீதம் வீழ்ச்சி

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சகம் அக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் வணிக ஏற்றுமதி, இறக்குமதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2020 அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 2 ஆயிரத்து 482 கோடி டாலராக இருந்தது. இது, கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.4 சதவீதம் குறைவாகும். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான ஏழு மாதங்களில் 15 ஆயிரத்து 7 கோடி டாலர் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இது 2019ஆம் ஆண்டை விட 19.05 சதவீதம் குறைவாகும்.

பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள், நகைகள், தோல் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும், கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் மாதம்வரை இந்தியாவின் ஏற்றுமதி 15 ஆயிரத்து 7 கோடி டாலராக பதிவாகி உள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 19.05 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.